இன்று தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். தமிழறிஞர்களது பாக்களை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும் எனக் குறிப்பிட்டார்.
கொரோனா காலத்திலும் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கப்பணிகள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விம்கோ நகர் ரெயில் பாதை குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் நீராதாரத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. எனக் குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில், " சென்னை அறிவும் ஆற்றலும் நிரம்பிய நகரம். வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என ஒளவையார் பாடல் வரிகளுக்கேற்ப தமிழகம் சிறப்புப் பெறுகிறது. நீராண்மையால் விவசாயம் சிறக்கிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டிருப்பதனால் போக்குவரத்து வசதி பெருகும். சிறந்த போக்குவரத்து சேவைகள் வணிகத்தை பெருக்க உதவும். மின் மயமாக்கப்பட்ட ரெயில் தடங்கள் டெல்டா மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதகும் " எனக் குறிப்பிட்டார்.
" பாதுகாப்பு துறைக்கு நவீன உபகரணங்களை வழங்கும் திட்டத்தில் உருவாக்கப்பெற்றுள்ள அர்ஜூன் மார்க் -1ஏ கவச வாகனத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது, " ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகளை" நினைவு கொள்கிறது என்பதை நினைவுகொண்டு பிரதமர் உரையாற்றினார்.