விவசாயிகளின் போராட்டம் அரியானா, காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. முக்கிய ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.
புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து பல மாதங்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். எவ்வித பேர்ச்சுவார்த்தைகளும் பலன் அளிக்காததால் டிராக்டர் பேரணியை அடுத்து இன்று ரயில் மறியல் போராட்டத்தை நாடு முழுவதும் நடாத்திவருகிறார்கள். இதனால் திக்ரி எல்லை, பண்டிட் ஸ்ரீராம் சர்மா, பகதூர்கார் சிட்டி மற்றும் பிரிகேடியர் ஹோசியார் சிங் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நான்கு மணிநேர ரயில் மறியல் போராட்டத்தை முன்னேடுக்க விவசாயிகள் அழைக்கப்பட்டதையடுத்து ரெயில்களின் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. மேலும் டெல்லி நங்லோய் ரெயில் நிலையத்திலும், அரியானாவில் பல்வால் ரெயில் நிலையத்திலும், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் ஜங்சனிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்து கண்காணிக்கப்படுகிறது.
இதனிடையே முக்கிய சில ரயில் நிலைய தண்டவாளங்களில் விவசாயிகள் மறித்து அமர்ந்தபடி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்