இந்தியா

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மாவட்டத்தில் உள்ள சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இன்று இரவு 7 மணிக்கு முன்னதாக, பிரசாரத்திற்காக வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விடவேண்டும். அதேபோல் கருத்து கணிப்புகளும் வெளியிட முடியாது. டாஸ்மாக் மதுக்கடைகளும் இன்று முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றன.

ஏப்ரல் 6ந் திகதி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக, மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றுடன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ‘விவிபேட்' கருவி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 எந்திரங்களும் இணைக்கப்பட உள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. நாளை திங்கட்கிழமை காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களும், அழியாத அடையாள மை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து ‘சீல்' வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2-ந்தேதி காலை, இந்த பெட்டிகளில் உள்ள ‘சீல்' உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும். அன்று காலை 11 மணி முதலே முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மாலைக்குள் ஆட்சி அமைப்பது யார்? என்பதும் தெரிந்துவிடும்.

இது இவ்வாறிருக்க, நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 93 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா , தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மிக வேகத்தில் பரவி வருகிறது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பிரதமர் மோடி இது தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.