இந்தியா

இன்று காலை 7 மணிக்கு தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்குமான தேர்தல் தொடங்கியது. ஒரே கட்டமாக மாலை 5.30 மணி வரை தேர்தல் நடக்கிறது. சாலை வசதிகள் அற்ற மலை கிராமங்களில் பிற்பகல் 3 மணியுடன் நிறைபெறுகிறது.

சாமானிய மக்களே இந்திய ஜனநாயகத்தின் அரசர்கள் என்பதை நிலைநிறுத்தும் இந்தநாளில்,  பிரபல சினிமா நட்சத்திரங்களும் தங்கள் உப்பரிகைகளை விட்டிறங்கி வெளியே வீதிக்கு வந்தார்கள். இங்கே வெளியிடப்பட்டிருக்கும் படங்களே நட்சத்திரங்கள் காலை 7 மணிக்கெல்லாம் வந்து வாக்களித்துச் சென்றிருப்பதை தெளிவுபடுத்தும்.

சென்னை நீலாங்கரையில் வசித்துவரும் தளபதி விஜய். அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சவாடிக்கு தனது வாக்கினை பதிவு செய்ய மிதி வண்டியில் வந்தார். தொடர்ந்து அவர் தனது வாக்கினையும் பதிவு செய்தார். விஜய்க்கு பாதுகாப்பாக ஒரேயொரு காவலர் மட்டும் பைக்கில் பின் தொடர்ந்து வர.. ரசிகர்கள் கூட்டம் பெரும் பேரணி போல பின்னால் திரண்டு வந்துவிட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.