இந்தியா

நடிகர் விஜய் தனது படங்களில் மட்டுமல்லாது செயலிலும் அரசியற் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்.

இன்று தேர்தலில் வாக்களிக்க மிதி வண்டியில் வந்த அவர், எந்த அரசியலும் பேசவில்லை. ஆனாலும் அவரது மிதிவண்டிப் பயணப்படம் மௌனமாகப் பெரும் அரசியலைப் பேசியிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். தமிழகத்தில் எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கான அவரது எதிர்பரசியலாக இந்தப்படம் அமைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகளிலான ரசிகர்களைத் தமிழகத்தில் கொண்டுள்ள நட்சத்திர நடிகரான அவரது இந்தப் படம், இன்றைய தேர்தல் வாக்களிப்பு நேரத்தில் மிகவும் கவனம் பெற்ற படமாகவும், அதிகம் பகிரப்பட்ட படமாகவும் இது அமைந்தள்ளது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.