இந்தியா

இந்தியாவின் பல மாநிலங்கிளலும், கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் முழு வேகத்துடன் தாக்கி வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையாக இது கருதப்படுகிறது.

குறிப்பாக மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கார், சண்டிகார், குஜராத், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, அரியானா ஆகிய 11 மாநிலங்களில் தொடா்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் மாநிலங்கள் அல்லது பெரும் கவலைக்குரிய மாநிலங்கள் என்று மத்திய அரசு மேற்குறித்த மாநிலங்களை வகைப்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 15 ஆயிரமாக உள்ளது. நாட்டில் கொரோனா பரவிய காலம் முதல் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு இதுவெனவும், தினசரி பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளையும் தாண்டி, இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும்நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு, அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் பற்றி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகளுடன் நாளை 8-ந் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கானொளிச் சந்திப்பினூடாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்போது, கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும், புதிதாக கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.