இந்தியா
Typography

சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனை இரண்டு நாட்களாக நடைப்பெற்று வருகிறது.

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் வரையான மெட்ரோ ரயில் ஓட்டம் கடந்த ஒரு வ்ருடமாக நடைப்பெற்று வருகிறது. விமான நிலையம் வரை சென்றால் நன்றாக இருக்கும் என்று மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில், சின்னமலை-விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்துப் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து, சோதனை ஓட்ட ம் கடந்த இரு நாட்களாக அதிகாரிகள் முன்னிலையில் நடைப்பெற்று வருகிறது.சிக்கனல்கள், பாதைகள் சரியாக இருக்கின்றனவா என்கிற ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில் ரயில்களை இயக்க அனுமதி கிடைக்கும் என்றும்,பின்னர் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் சின்னமலை-விமான நிலையம் இடையேயான போக்குவரத்துத் தொடங்கும் என்றும் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS