இந்தியா
Typography

ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும் என்கிற தமது தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நரேந்திரே மோடி நிறைவேற்றவில்லை என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் மேற்கண்டவாறு குற்றம் சாட்டி உள்ளதோடு, எப்போது விலைவாசியை மோடி குறைப்பார் என்றும் ஒரு கேள்வியை ராகுல் காந்தி மக்களவையில் எழுப்பியுள்ளார்.அதோடு, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாகி உள்ளது என்றாலும், இதன் முழுப்பயன் விவசாயிகளை சேரவில்லை என்பது மிக வருத்தத்துக்கு உரிய செயலாக உள்ளது என்றும் வேதனை
தெரிவித்திருந்தார்.

எனவே, பருப்பு விலை மட்டுமாவது எப்போது குறையும் என்று மோடி காலவரையறையை தெளிவாக்க கூற வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தி உள்ளது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மோடி அப்போது அவையில் இல்லை என்பதால், ராகுலின் கேள்விக்கான பதில் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS