இந்தியா
Typography

பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இணைக்கப்பட உள்ள வங்கிகளின் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பாரத் வங்கியுடன் ஹைதராபாத், ஸ்டேட் வங்கி, ஜெய்ப்பூர் வங்கி உள்ளிட்ட 5 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த 5 வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. ஆனால், மத்திய அரசு தமது முடிவை மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் இன்று  ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் சங்கங்கள் ஈடுபட்டு உள்ளன. இதனால் பணப்பரிவர்த்தனை வெகுவாகப் பாதிக்கப்படும் என்றாலும், மக்கள் பணத் தேவைக்காக ஏடிஎம் மையங்களில் தேவையான அளவு பணம் நிரப்பப்பட்டு உள்ளன என்று தகவல் தெரிய வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரத்து 500 வங்கிகளில் உள்ள 70 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய அளவில் 10 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர் என்று தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS