இந்தியா
Typography

பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்துக்கொண்டு பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார் என்று தெரிய வருகிறது.

வருகிற வாரத்தில் பாகிஸ்தானில் சார்க் நாடுகளின் மாநாடு நடைப்பெற உள்ளது.இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் செல்கிறார்.அதோடு இஸ்லாமாபாதத்தில் சார்க் மாநாடுகள் உள்துறை அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்வும் நடைப்பெற உள்ளது. இதில் பங்கேற்கும் ராஜ்நாத் சிங், பயங்கரவாதம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருவத்துக் குறித்தும், இதற்கு பல நாடுகள் ஊக்கம் அளித்து வருவதுக் குறித்தும் மிக காட்டமாக எடுத்து வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மிக வெளிப்படையாக இந்தியாவினுள் பயங்கரவாதத்த்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவத்துக் குறித்தும், இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள பாகிஸ்தானுக்கு அறிவுறுத்துவதுக் குறித்தும் ராஜ்நாத் சிங் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS