இந்தியா
Typography

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயித்து வருகின்றன. அதன் படி கடந்த மே மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 1ம் திகதி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைத்து அறிவிக்கப்பட்டது.

அதன் படி இன்று பெட்ரோல், டீசல் விலையை இன்றும் குறைத்து அறிவித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 42 காசுகள் குறைத்தும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தும் அறிவித்துள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிய வருகிறது.புதிய விலையின் படி பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 62 ரூபாயும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 55 ரூபாய் 82 காசுகள் என்றும் விற்கப்படும் என்று தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்