இந்தியா
Typography

விளையாட்டு வீரர்கள் ஒரு நாளில் உருவாவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நரேந்திர மோடி மாதா மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் என்கிற நிகழ்ச்சி மூலம், வானொலியில் மக்களோடு உரையாற்றி வருகிறார். இன்று அவர் ஆற்றிய உரையில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது, விளையாட்டு வீரர்கள் ஒரே நாளில் உருவாவதில்லை என்றும், பல நாட்கள் முயற்சியின் மூலம் அவர்கள் வீரர்களாக உருவாகிறார்கள் என்றும் கூறியுள்ளார். அதன் படி ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிப்பது நமது கடமை என்றும் அவர் தமது உரையில் கூறியுள்ளார்.

மேலும், பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழக்கும் விகிதம் என்பது குறைந்து உள்ளது என்று கூறியுள்ள மோடி, கருவுற்று இருக்கும் பெண்கள் மாதா மாதம் ஆரம்ப சுகாதார மையங்கள், மற்றும் மாவட்ட சுகாதார மையங்களில் இலவசமாக பரிசோதனை செய்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி தாம் சுதந்திர தின உரை நிகழ்த்த உள்ளதாகவும், இதற்கு தம்மிடம் மக்கள் இப்போதிலிருந்தே தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்றும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்