இந்தியா
Typography

ஐந்து லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

ரயில்வே துறை அலுவலக ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், கார்டுகள், ரயில் ஓட்டுனர்கள், கேட்டரிங் ஊழியர்கள் என 5 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்திய கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக 4 வெவ்வேறு டிசைன்களை உருவாக்கி இருக்கிறார் பிரபல பேஷன் டிசைனர் ரிது பெர்ரி. இந்த டிசைன்களை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் அவர் ஏற்கனவே சமர்ப்பித்து இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

அதில், ஒரு டிசைனில் அவர் இந்தியாவின் கலாச்சாரம், இசை, வணிகம், பொழுதுபோக்கு ஆகியவற்றை இடம்பெறச் செய்துள்ளார். ரிது பெர்ரி வடிவமைத்துள்ள 4 டிசைன்களை பற்றிய கருத்துக்களை ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பொது மக்கள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. என்றும் பின்னர் மக்களின் விருப்பப்படி, புதிய சீருடைகளை ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே துறை அறிமுகப்படுத்த உள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்