இந்தியா
Typography

டெல்லியில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை,என்று திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை வருவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்த அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, எதிரே வந்த திருச்சி சிவாவை பார்த்தும், பாய்ந்து சென்று அவரது சட்டையை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அப்போது சசிகலா புஷ்பா திடீரென்று திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினார்கள். திருச்சி சிவாவை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சசிகலா புஷ்பா விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றார். இரு எம்.பி.க்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த கைகலப்பால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி பின்னர் திருச்சி சிவா கூறுகையில், சசிகலா புஷ்பா காரணம் இன்றி திடீரென்று சட்டையை பிடித்து இழுத்து என்னை தாக்கினார்’என்று கூறியுள்ளார்..

சசிகலா புஷ்பா கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி பற்றியும், முதல் அமைச்சர் ஜெயலலிதா பற்றியும் திருச்சி சிவா தவறாக விமர்சித்ததால் அவரது கன்னத்தில் 4 முறை அறைந்ததாக தெரிவித்தார். இதற்கு திருச்சி சிவா அளித்துள்ள விளக்கத்தில் டெல்லியில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை என்று  கூறி உள்ளார். தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ள திருச்சி சிவா, அதிமுகவை விமர்சனம் செய்தால் பொது இடத்தில் தாக்குவதா என்று கேள்வி எழுப்பிஉள்ளார். அரசை விமர்சனம் செய்தால் பொது இடத்தில் தாக்கும் கலாசாரம் பரவி வருகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், டெல்லியில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை என்று விளக்கம் அளித்து உள்ளார்.அதோடு, அவர் தம்மை 4 முறை அறையவில்லை என்றும், ஒரு முறை அறைந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS