இந்தியா
Typography

விரைவில் ஆயுர்வேத மருந்துகளுக்கு தரக்கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்தார். 

ஆயுர்வேத மருந்துகளுக்கு தரக்கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் எளிதாக இந்த மருந்துகளைப் பெற கூடுதலான ஆயுர்வேத மருந்துக கடைகளைத் திறக்கவும் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் யசோத் நாயக் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பல்வேறு துணைக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் தனது அமைச்சரவையானது ஆயுர்வேத மருந்துகளுக்கான தனிப்பட்டியல் ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இப்போதிருக்கும் ஆங்கில மருந்துகள் பட்டியலிலிருந்து ஆயுர்வேத மருந்துகள் பட்டியல் பிரிக்கப்படும் என்றார் அவர். 

இதன் மூலம் ஆயுர்வேத மருந்துகளை தரப்படுத்தும் வேலைகளின் மீது கவனம் செலுத்த இந்த நடவடிக்கை உதவும் என்று அவர் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் தரமற்ற மருந்துகள் விற்கப்படுவது குறித்து தெரியவந்துள்ளதாகவும் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கென்று தேசியளவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ. 11.50 கோடிகள் ஆயுர்வேத மருத்துவமுறையை மேம்படுத்த நிதியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

வெற்றிடமாகவுள்ள மருத்துவ, செவிலியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். பட்டமேற்படிப்பிற்கான 50 சதவீத இடங்கள் ஆரம்ப மற்றும் சமூக உடல் நல மையங்களில் மூன்றாண்டுகளுக்கு  பணி புரிய ஒப்புக்கொள்ளும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்