இந்தியா
Typography

அதிமுகவில் பொறுப்பு கேட்ட திவாகரனின் மகன் என்று அதிமுக வட்டாரத்தில் இப்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுகவில் சசிகலாவின் தரப்பிற்கும் , பன்னீர் செல்வத்தின் தரப்பிற்கும் இடையே நடந்து வரும் அதிகாரப் போட்டிதான் தமிழகத்தின் இப்போதைய ஹாட் டாபிக். சசிகலாவின் குடும்பத்தில் இருந்து இனி யாரும் அரசு நிர்வாகம் மற்றும் கட்சிப் பணியில் தலையிடமாட்டார்கள் என்று சொல்லித்தான் தினகரன், துணைப் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். 

பதவி ஏற்ற ஒரு சில நாட்களில் சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் தம்பி திவாகரன் உள்பட சசியின் குடும்பத்து ஆட்களை கட்சி மற்றும் ஆட்சியில் தலையிடுவதை ஒதுக்கி வைத்தார் தினகரன். அரசு அதிகாரிகளுக்கும் வாய் மொழி உத்தரவாக தினகரனின் அனுமதியில்லாமல் எதுவும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு
அதிமுகவில் இளைஞர், இளம் பெண் பாசறையில் மாநில பொறுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம். இது தேர்தல் நேரம் என்பதால் கட்சியில் இப்போது போஸ்டிங் போட்டால் தேவையில்லாத பிரச்னை உருவாகும். ஆதலால் ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று தினகரன் மறுத்துவிட்டாராம்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்