இந்தியா
Typography

வரும் 22-ஆம் தேதி இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக
சசிகலாவுக்கு பரோல் கேட்டு விண்ணப்படித்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி
உள்ளன.

வரும் 22-ஆம் தேதி இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா
அணிகள் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என அதிமுகவின் இரண்டு
அணிகளான சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இரு அணியினரையும் நேரில் ஆஜராகி விளக்கம் கேட்டுள்ளது
தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகரில் வரும் 24-ஆம் தேதி வேட்பாளர்களுக்கு
சின்னங்களை ஒதுக்க உள்ளது தேர்தல் ஆணையம். இதனையொட்டி வரும் 22-ஆம் தேதி
இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா அணிகள் நேரில் ஆஜராக
வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதில் சசிகலா நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு
உள்ளதாக கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி சசிகலாவுக்கு சிறையில் பரோல்
கேட்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம்
விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. பெங்களூரில் இருந்து
டெல்லி செல்லும் சசிகலா டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்ப
வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேர்தல்
ஆணையத்தின் உத்தரவை காட்டி சசிகலாவுக்கு பரோல் கேட்கப்பட்டால் அவருக்கு
அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

 

Most Read