இந்தியா
Typography

டெல்லி மெட்ரோ இன்று சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்று அறிவிப்பு
வெளியாகி உள்ளது.

ஜாட் இன மக்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு
மெட்ரோ ரயில் சேவை இன்று சில கட்டுப்பாடுகளுடன் வழக்கம் போல் இயங்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஜாட் இன மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு
உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியறுத்த நடத்திய போராட்டத்தினால் மெட்ரோ ரயில்
சேவை நேற்று ஒருநாள் பாதிக்கப்பட்டது. ஆனால், இன்று முதல் டெல்லி மெட்ரோ
ரயில் சேவை சில கட்டுப்பாடுகளுடன் வழக்கம் போல் இயங்கும் என்று டெல்லி
மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மஞ்சள் வழித்தடத்தில் உள்ள மத்தியச் செயலகம், படேல் சதுக்கம், உத்யோக்
பவன், லோக் கல்யாண் சாலை ஆகிய நிலையங்களில் மட்டும் பயணிகள் வெளியேறுவது
தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலையங்களிலிருந்து வேறு
இடங்களுக்குச் செல்ல வழக்கம் போல் அனுமதி உண்டு. குர்கான், நொய்டா,
ஃபரிதாபாத் ஆகிய நிலையங்கள் முழுமையாக வழக்கம் போல் இயங்கும் என்று
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம், விதித்த
கட்டுப்பாடுகளால் மத்திய டெல்லியில் உள்ள 12 மெட்ரோ ரயில் நிலையங்கள்
காலை 11.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூடப்பட்டன.

இந்நிலையில், இன்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஜாட்
இனத்தவரைச் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம்
முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, டெல்லி
மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்