இந்தியா
Typography

ராமேஸ்வரம் மீனவர்கள் குழுவினர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர்கள் கடந்த 6
ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைக்
கண்டித்து கடந்த 11 நாட்களாக ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மத்திய அமைச்சர்கள் நடத்திய
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு நேற்று
முதல் கடலுக்கு செல்கின்றனர். இந்நிலையில், தங்கள் பிரச்சனை குறித்து
சுஷ்மா ஸ்வராஜிடம் நேரில் எடுத்துரைக்க ராமேஸ்வரம் மீனவர்கள் குழுவினர்
இன்று டெல்லி செல்கின்றனர்.

நாளை அவர்கள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வெளியுறவுத்
துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த
உள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தும்படி
கேட்டுக் கொள்வதுடன், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை
மீட்கவும் அவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர்.

Most Read