இந்தியா
Typography

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு கெடு
இன்று முடிகிறது என்று தகவல் தெரிய வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 15ம் தேதியன்று டெல்லி சென்று தலைமை தேர்தல்
கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்தித்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை
நியமனம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை
சின்னத்தை தங்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, சசிகலா அணியினரும் 16ம் தேதி நசீம் ஜைதியை சந்தித்து,
பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்கள் இப்போது
எதிர்ப்பதாக கூறியதோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம்
அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதன்பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஒரு மனு தேர்தல்
கமி‌ஷனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘டி.டி.வி.தினகரன் இரட்டை இலை
சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை.
ஜெயலலிதா அவரை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் மீண்டும் அவர்
கட்சியில் சேர்க்கப்பட்டு பொறுப்பு தரப்பட்டதே கட்சியின் விதிமுறைகளுக்கு
முற்றிலும் முரணானது. எனவே, இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கே ஒதுக்க
வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து அன்று இரவு இந்திய தேர்தல் ஆணையம் சசிகலா நடராஜனுக்கு
நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில் ஆர்.க.நகர் தொகுதியில் இரட்லை இலை
சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.

 

Most Read