இந்தியா
Typography

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று
அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சசிகலா புஷ்பா எம்பி, திமுக எம்பியான திருச்சி சிவாவை விமான நிலையத்தில் வைத்து அறைந்தார் என்று தகவல் வெளியாகியது. திருச்சி சிவாவும், சசிகல புஷ்பாவும் இது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட நிலையில், முதல்வர்
ம்மாவைப் பற்றியும், அவரது ஆட்சிக்கு குறித்தும் திருச்சி சிவா தவறாக அவிமர்சனம் செய்தார் என்றும், அதனால், திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன் என்றும் சசிகலா புஷ்பா கூறினார்.

ஜனநாயக நாட்டில், ஆட்சியை விமரிசனம் செய்தேன் என்று அடிப்பது என்ன கலாச்சாரம் என்றும், அவர் ஒருமுறைதான் தம்மை அறைந்தார் என்றும் திருச்சி சிவாவும் உண்மையை ஒப்புக்கொண்டு இருந்தார்.இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, தாம் திருச்சி சிவாவை அறைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார். என்றாலும், தாம் ராஜினாமா செய்ய வற்புறுத்தப் பட்டு உள்ளதாகவும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது பாதுகாப்பு வேண்டும் என்றும் பேசினார்.

இந்நிலையில்தான், சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளதாகவும், கட்சியின் பெயருக்கு அவதூறு ஏற்படும் வகையில் அவர் நடந்துக் கொண்டதால் இந்த நடவடிக்கை என்றும் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS