ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் போராட்டம் நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் இன்று காலை சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும், அதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து இன்னமும் எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார்.
எனவே, இன்று ஆந்திராவின் அனைத்துக் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன்னர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மானுன போராட்டம் நடத்த உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
முன்னதாக, ஆந்திராவில் ஒரே நாளில் 1 கோடி மரக்கன்றுகளை நடும் வனம் மனம் திட்டத்தை முதல்வர் சந்திரபாபுநாயுடு தொடங்கி வைத்தார். 23 சதவீதம் உள்ள வனப்பகுதியை 2029 ஆண்டில் ஆந்திராவில் உள்ள மொத்த பரப்பளவில் 50 சதவீதம் வனப்பகுதி இருக்கும் விதமாக செய்வதே லட்சியம் என அவர் தெரிவித்தார். நாட்டிலேயே இரண்டு நதிகளை தெலுங்கு தேச கட்சி அரசு செய்துள்ளதாகவும் நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதால் வறட்சியே இல்லாத நிலை ஏற்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.