இந்தியா
Typography

சென்னை உயர் நீதிமன்றத்தை,தமிழக உயர் நீதிமன்றம் என்கிற பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த 21ம் திகதி முதல் தமிழக சட்டப்பேரவை நடைப்பெற்று வருகிறது. இன்று, பேசிய தமிழக முதல்வர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகம் முழுவதுமான மக்களின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், எனவே, இது சென்னைக்கு மட்டும் சொந்தமான நீதிமன்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே, சென்னை  உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு  உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றி வைக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாகவும், இதை மத்திய அரசிடம் சட்டத் திருத்தத்தில் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார். இதற்கு திமுக,காங்கிரஸ்  முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது
என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

மெட்ராஸ் ஹைகோர்ட் என்று இருப்பதை சென்னை உயர் நீதிமன்றம் என்று மாற்ற மத்திய அரசு அண்மையில்தான் அறிவிப்பு வெளியிட்டு சட்டத் திருத்தம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது என்பது இவ்வேளையில் குறிப்பிடத்  தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS