இந்தியா
Typography

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, நடிகர் ரஜினிகாந்தை புதுவை மாநிலத்தின் சுகாதாரத்துறை தூதுவராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளார். 

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் கிரண்பேடி, புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று இரன்டு மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், புதுவையில் அம்மாநில வளர்ச்சிக்காக பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.நகராட்சி அலுவலக அதிகாரிகளுடன் தொடர்புக்கொண்டு மற்றும் இணைந்து நீர் நிலைகளை சுத்தப்படுத்துவது, சாலைகளை தூய்மைப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது என்பது இதில் சிறப்பு அம்சம்.

அடுத்து மாநிலத்தில் சுகாதாரத்துறை மேம்பட்ட வேண்டும் என்று இவர் விரும்புவதாகத் தெரிய வருகிறது. எனவே, பிரபல நடிகர் ரஜினிகாந்தை புதுவை மாநிலத்தின் காதாரத்துறை விளம்பர தூதுவராக நியமிக்க ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் புதுவை மாநிலத்தின் சுகாதாரத்துறை விளம்பர தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்டால் புதுவையில் சுகாதாரத்துறை மேம்படும் என்று மேலும், தெரிவித்துள்ளார் கிரண்பேடி.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்