இந்தியா
Typography

இன்று தமிழகம் முழுவதும் அதாவது மிக  முக்கியமாக காரிவி  டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக கோலாகலமான முறையில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

ஆடிப்பெருக்கு விழாவை புதுமானத் தம்பதியர் மற்றும் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மிகவும் உற்ச்சாகத்துடன் கொண்டாடி  மகிழ்வது வழக்கம். காவிரி நதியின் படித்துறையில் காவிரி அம்மனுக்கு கருவளையல் ,பழங்கள்,மஞ்சள் கயிறு, காப்பரிசி கிளறி படையலிட்டு, பின்னர் கருவளையல் வைத்த அந்த படையலை ஆற்றில் விட்டு வழி படுவது மக்களிடையே தொன்றுத தொட்டு தொடரும் பழக்கமாக இருந்து வருகிறது.

புதுமானத் தம்பதியர் இன்று தங்களது தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்வதும் வழக்கம். கல்யாணமாகாத இளம்பெண்கள், தங்களது விரைவில் திருமணமாக வேண்டி படையலிட்ட மஞ்சள்  கயிற்றை  பெரியவர்களின் கையால் அணிந்துக்கொள்வதும் வழக்கம். இப்படியாக காவிரி டெல்ட்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டி வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்