இந்தியா
Typography

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று விவாத நேரத்தின் போது, திமுக உறுப்பினர் ஒருவர் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார். அதோடு, டெங்கு காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை மையங்கள் என்று சொல்லப்படும் எலீசா மையங்கள் போதாது என்றும் அவர் கூறினார்.

அப்போது பேசிய விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளான, கொசு மருந்துகளை அடிப்பது, சுகாதார மையங்களில் மருந்துகள் கையிருப்பில் வைப்பது என்று அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் கட்டுக்குள்தானா உள்ளது என்று கூறினார். மேலும், எலீசா ரத்தப் பரிசோதனை மையங்கள் 31 லிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

விளக்கத்தில் டெல்லியில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை என்று  கூறி உள்ளார். தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ள திருச்சி சிவா, அதிமுகவை விமர்சனம் செய்தால் பொது இடத்தில் தாக்குவதா என்று கேள்வி எழுப்பிஉள்ளார். அரசை விமர்சனம் செய்தால் பொது இடத்தில் தாக்கும் கலாசாரம் பரவி வருகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், டெல்லியில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை என்று விளக்கம் அளித்து உள்ளார்.அதோடு, அவர் தம்மை 4 முறை அறையவில்லை என்றும், ஒரு முறை அறைந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்