இந்தியா
Typography

திரையரங்குகளில் அதிக கட்டணம் செலுத்துவதுத் தொடர்பான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதுக் குறித்து கண்காணிப்பக் குழுவை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்து இருந்தது. ஆனால், அந்த குழு முறைப்படி செயல்படவில்லை என்று முறையிட்டு, தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது என்றும், மற்ற இடங்களிலும், புகார் அளிக்காத தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கண்காணிப்புக்கு குழுவின் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுமைக்குமான ஒரே புகார் தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும்  உத்தரவுப் பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்