இந்தியா
Typography

பிரதமர், முதல்வர்கள் மற்றும் உயர்பதவி வகிப்பவர்கள் மீது தேவையற்ற வழக்குகள் தொடுப்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மோகினி கம்வாணி அவரது மகன் திலீப் கம்வாணி இருவரையும் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நவி மும்பை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டது தவறு எனக் கூறிய நீதிபதிகள், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். ஆனால் தங்களை கைது செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் இதற்காக மகாராஷ்டிர முதல்வர், மாநில உள்துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது: நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்கள் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி, அவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்வது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்பவர்கள், முதலில் அப்பதவிகளின் உன்னதத்தை புரிந்து கொள்ள வேண்டும். நீதிக்காக கோர்ட்டை நாட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதனை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS