இந்தியா
Typography

ராணுவம் தரப்பில் ஒரு உயிரை இழந்தால் பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். 

இந்திய எல்லைப்பகுதியில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாலும், இந்திய ராணுவ வீரர்கள் சிலரும் தாக்குதலில் மரணமடைகின்றனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்த வருடத்தில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்றதாக இதுவரை 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருக்கும் இந்திய ராணுவத்தால், அத்துமீறி ஊடுருவ முயலும் பயங்கரவாதிகள்  சுட்டு கொல்லப்படுகின்றனர் அல்லது விரட்டியடிக்கப்படுகின்றனர். மேலும் பணியில் இருக்கும் போது 14 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். இந்திய ராணுவம் ஒரு வீரரை இழந்தால் பயங்கரவாதிகள் தரப்பில் 5 பேர் கொல்லப்படுவதாக  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்