இந்தியா
Typography

நாங்கள் மைனாரிட்டி ஆட்சிதான் செய்தோம் இவர்கள் மெஜாரிட்டி ஆட்சிதானே நன்றாக நடத்த சொல்லுங்கள் என்று, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், மைனாரிட்டி திமுக ஆட்சி என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறுவதுக் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ஸ்டாலின், நாங்கள் மைனாரிட்டி ஆட்சி செய்தபோதும் மிக நன்றாகவே ஆட்சி செய்தோம் என்றும், மெஜாரிட்டி ஆட்சி செய்யும் இவர்கள் தங்களது ஆட்சியை நல்ல முறையில் செய்யச் சொல்லுங்கள் என்று கூறினார்.

சசிகலா புஷ்பா எம்பி, நாடாளுமன்றத்தில் வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் அனுமதி அளிக்கவில்லை. இதிலிருந்தே தெரிகிறது சசிகலா புஷ்பா விவகாரத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்று, இவர்கள் அதை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்று ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS