இந்தியா
Typography

முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

இன்று சட்டப்பேரவை கூடியதும் மின்துறை மீதான விவாதம் நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது. இதில் தூத்துக்குடி எம் எல் ஏ, திமுகவின் 89 எம் எல் ஏக்களையும் 89 வயக்காட்டு பொம்மைகள் என்று வர்ணித்தார். அதோடு இந்த வயக்காட்டு பொம்மைகளைக் கண்டு கொக்கு, குருவி பயப்படலாமே தவிர சிங்கம் பயப்படாது என்று கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், அவர்பொ துவாகத்தன பேசினார் என்பதால், இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சொல்லிய முதல்வர் ஜெயலலிதா அவையைவிட்டு கிளம்பி விட்டதாகத் தெரிய வருகிறது.

இதற்கு எதிராக திமுக உறுப்பினர் ஸ்டாலின், 132 கொத்தடிமைகள், 132 சதை பிண்டங்கள் என்று சொல்லலாமா என்று கேட்டதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கம் செய்தார் என்று தெரிய வருகிறது. இதையடுத்து திமுகவினர் 45 நிமிடங்கள் எழுப்பிய அமளி காரணமாக சபை இன்று ஒத்தி வைக்கப்பட்டது.சட்டப்பேரவை வரலாற்றில் தமிழக சட்டப்பேரவை இதுவரை ஒத்தி வைக்கப்பட்டதில்லை என்று மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS