இந்தியா
Typography

சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரோந்து சைக்கிள்கள் காவல் நிலையங்களில் தூசி படிந்து வெறும் காட்சிப் பொருளாகி இருக்கின்றன. 

சென்னை மற்றும் புறநகர்களில் செயின் பறிப்பு சம்பவம் என்பது தொடர்கதையாகி வருவதால், ரோந்து போலீசார்களின் ரோந்து பணிகளில் கூடுதல் கவனம் தேவை என்று முடிவு எடுக்கப்பட்டது. போலீசாரின் ரோந்து வாகனமான ரோந்து கார்கள் ஒலி  எழுப்புவதால், செயின் பறிப்பு கொள்ளையர்கள் உஷாராகி, வாகனம் வந்து சென்றவுடன் தங்களது செயின் பறிப்பு வழிப்பறிக் கொள்ளைகளை தொடங்கி விடுகின்றனர் என்றும், சுற்றித் திரியும் திருடர்களைக் கண்டறிய முடிவதில்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து காவல் நிலையங்களுக்கு திருடர்களை சத்தமின்றி பிடிக்கும் வகையில் ரோந்து சைக்கிள்கள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த ரோந்து சைக்கிள்கள் ஒரு காவல் நிலையங்களுக்கு 4 என்கிற எண்ணிக்ககையில் கடந்த மாதம் காவல் நிலையங்களுக்கு  வழங்கப்பட்டது. என்றாலும், சைக்கிளில் ரோந்து சென்று செயின் பார்ப்புத் திருடர்களை பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்றும், திருடர்கள் அதிவேகமான பைக்குகளில் பறந்து சென்று விடுவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே, சைக்கிள் ரோந்து பணிகளுக்கும், திருடர்களை பிடிக்கும் பணிகளுக்கும் ஏற்றதாக இல்லை என்று, காவலர்கள் சைக்கிளில் ரோந்து வருவதைத் தவிர்த்துள்ளனர். இதனால், அரசால் வழங்கப்பட்ட ரோந்து சைக்கிள் காவல் நிலையங்களில் தூசு படிந்து கேட்பாரற்று காட்சிப் பொருளாகக் கிடக்கின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்