இந்தியா
Typography

சாலைப் போக்குவரத்து சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

சாலைகளில் பெருகிவரும் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில், சாலைப் போக்குவரத்து மற்றும் வாகன விதிமுறை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இம்மசோதா அமலுக்கு வந்தால், பல்வேறு சட்ட விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி தவறினால் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று தெரிய வருகிறது. சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து நேரிட்டால், வண்டிக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்படும். சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், மேலும், பெற்றோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று கடுமையான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 3 ஆயிரம் ரூபாய் அபராதம், ஓட்டுநர் உரிமம் ரத்து, ஹெல்மெட் எனப்படும் தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் சட்டத் திருத்தத்தில் இடம்பெற்று உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS