இந்தியா
Typography

கரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கரூர்
மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், இறைச்சிக் கடைகள்,
டீக்கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர உணவு வியாபாரிகள், மளிகைக்
கடைகள், உணவுப் பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப் பொருள்
தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உணவு நிறுவனங்களில் வழங்கப்படும் உணவின்
தரம் மற்றும் உணவு வணிக நிறுவனங்களின் சுகாதாரம் குறித்தான தங்களது
புகார்களை தெரிவிக்க ஏதுவாக, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர்
அவர்களால் “வாட்ஸ்அப் புகார் சேவை *9444042322* என்ற அலைபேசி எண்
தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் உணவின் தரம் அல்லது உணவகங்களின் சுகாதாரம் குறித்து
புகார் தெரிவிக்க விரும்பினால், மேலே கூறிய அலைபேசி எண்ணில் வாட்ஸ்அப்
மூலம் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது, உணவகம் அல்லது
உணவு வணிக நிறுவனத்தின் பெயர், ஊர் மற்றும் மாவட்டத்தினை தெளிவாகக்
குறிப்பிடவும். மேலும், தவறாமல் தங்களது பெயர் மற்றும் அலைபேசி எண்ணைக்
குறிப்பிடவும். புகார்தாரர் குறித்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். அதுமட்டுமல்லாது,
கரூர் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்திற்கும் நேரிடையாக *04324-255347*
என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்திய உணவுப்
பாதுகாப்பு தர நிர்ணய ஆணையரகத்திற்கு *9868686868* என்ற வாட்ஸ்அப் எண்
மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு, பாதுகாப்பான மற்றும் தரமான உணவை வழங்குவதை உறுதி செய்ய
வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையை
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் ஆக்கபூர்வமாகப்
பயன்படுத்திக்கொள்ளுமாறு, கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்,
அறிவித்துள்ளார்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்