இந்தியா
Typography

சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கற்பிக்கும் திறன், திறமை, மாணவர்களின் பாஸ்
செய்யும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கிரேடு முறையை கொண்டு வர மத்திய
அரசு ஆலோசித்து வருகிறது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு மட்டுமே கிரேடு முறை தற்போது இருந்து
வரும் நிலையில், இனிமேல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் கிரேடு முறை
விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாகத் தெரிகிறது.

நாட்டில் தற்போது சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்று 18 ஆயிரம் பள்ளிகளும்,
வௌிநாடுகளில் 250 பள்ளிகளும் இயங்குகின்றன. இவற்றுக்கு கிரேடு முறை
வழங்கப்பட உள்ளது.இது குறித்து சி.பி.எஸ்.இ. அமைப்பின் மூத்த அதிகாரி
ஒருவர் கூறுகையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கிரேடு முறை
கொடுக்கப்படும் போது, பள்ளிகளின் கல்வித்தரம் மேலும் அதிகரிக்கும்,
ஆடம்பரமான போக்கும், விளம்பரமும் குறையும் எனத் தெரிவித்தார்.

Most Read