இந்தியா
Typography

வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்களின் வாக்காலத்தை நீதிபதிகள் ரத்து செய்யலாம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்களின் போராட்டத்தை கருத்திக்கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை செய்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கீழமை நீதி மன்றங்களுக்கு சசுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த சுற்றறிக்கையில், மனுத் தாக்கல் செய்யும் மனுதாரரையே தமது வழக்கில் வாதாட அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு, வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்கள் வக்காலத்தை நீதிபதிகள் ரத்து செய்யலாம், அப்படி ரத்து செய்யும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் பிரச்சனை செய்தால், அந்த வழக்கறிஞர் மீது நீதிபதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், அந்த புகாரை வைத்து காவல் நிலையம் நடவடிக்கை எடுக்கலாம் என்பன போன்ற விஷயங்கள் அந்த சுற்றைக்கையில் இடம்பெற்று உள்ளன.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களை சட்ட வல்லுனர்களாக நியமிக்கக் கூடாது என்றும்,ஓய்வு நீதிபதிகளை சட்ட வல்லுனர்களாக நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் அந்த சுற்றைக்கையில் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS