இந்தியா
Typography

சார்க் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்துக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஒரு நாட்டின் தீவிரவாதி மற்றொரு நாட்டுக்குத் தியாகியாகிவிட முடியாது என்று பாகிஸ்தான் நாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் சார்க் மாநாடு நடைப்பெற்றது. இதில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டிருக்கையில்,நவாஸ் ஷெரீப் உரை நிகத்தியதாகத் தெரிய வருகிறது. அப்போது அண்மையில் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவரை தியாகி என்று நவாஸ் ஷெரீப் புகழ்ந்ததாகவும் தெரிய வருகிறது. இதில் கோபமடைந்த ராஜ்நாத் சிங் பதிலுக்கு காட்டமாக உரை நிகழ்த்தினார் என்றும், ஒரு நாட்டின் தீவிரவாதி, மற்றொரு நாட்டுக்கு எப்படித் தியாகியாக முடியும் என்றும், தீவிரவாதிகளை தியாகிகளாக சித்தரித்து புகழ்பாடுதல் கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்ததாகத் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்