இந்தியா
Typography

சவூதி அரேபியாவில் வேலையின்றித் தவிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை சந்தித்தார் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங். 

சவூதி அரேபியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்தியர்கள் வேலையின்றி, உண்ண உணவின்றித்  தவித்து வருகின்றனர் என்கிற தகவல் பரவியது. இதையடுத்து சவூதி அரேபியாவுக்கான இந்திய தூதரகத்தின் மூலம் தகவலை உறுதிப் படுத்திக்கொண்டு, சவூதி புறப்பட்ட வி.கே.சிங், அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இந்திய தூதரக உதவியுடன் அவர்களுக்கான உணவுகளை வழங்க ஏற்பாடுகள் செய்தார்.

மேலும், சவூதி நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து, வேலை இழந்த இந்தியர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை வழங்க ஏற்பாடு செய்துதர கோரிக்கை  வைத்தார்.அவரும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS