இந்தியா
Typography

விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், பெருநகர வளர்ச்சித் துறை மற்றும் பத்திர பதிவு அலுவலகத்தில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக்குவதற்கு அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பெருநகர வளர்ச்சிக்கு குழுமம் சார்பாக ஆஜரான வழக்கறிகர், இதை நெறிமுறைப்படுத்தி ஒழுங்குப படுத்தக் குழு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். ஆனால், மனுதாரர் சார்பு வழக்கறிஞர், விளை நிலங்களை வீட்டு மனைகளாக விற்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றுதான் தாம் மனுவில் கூறி உள்ளதாகவும், இதை நெறிமுறைப் படுத்த வேண்டும் என்று மனுவின் ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து, மனுதாரரின் மனுவுக்கு பத்திர பதிவு அதிகாரிகள் மற்றும் சென்னை  பெருநகர வளர்ச்சிக்கு குழுமம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS