இந்தியா
Typography

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி அனுமதியை ரத்து செய்து இன்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இயங்கி வந்த எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி செயல்பட்டு வந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த கல்லூரியில் பயின்ற 3 மாணவிகள் மர்மமான முறையில் இறந்து குளத்தினுள் பிணமாக மீட்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் சீலிட்டது.

உயிரிழந்த மாணவிகள் இறப்புக்கு குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது.இந்நிலையில், எஸ்விஎஸ் மருத்துவக் கல்லுாரிக்கு 2013 செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட மருத்துவக் கல்வி பயிற்சி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்து, அரசாணை வெளியிட்டு உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்