இந்தியா
Typography

 

ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய 'ரயில் கீதம்' இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை வெளியிட்டுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. 

இந்த கீதத்தை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.நாட்டு மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் ரயில்வே துறை ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ரயில் கீதத்தை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சகம்திட்டமிட்டது. இதன் படி, பிரபல இசையமைப்பாளர் ஷ்ரவன் இசையில், பாடகர்கள் உதித் நாராயண் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடிய ரயில் கீதம், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டுள்ள இந்த பாடல், பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இருப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, நேற்று இந்த பாடலை அறிமுகம் செய்து வைத்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்