இந்தியா
Typography

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.  பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் உச்ச நீதிமனத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், அடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது-பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்தான் தற்போது சட்டம் உள்ளது. அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். 

குழந்தைகள், சிறுவர்களின் முக்கிய உணவாக பால் இருக்கிறது. அதில் செயற்கை பவுடர்கள், ரசாயனங்கள் கலந்து விற்பனை செய்வது உயிர் மற்றும் உடல் சுகாதாரத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. இது எதிர்கால சந்ததியினரை மிகவும் பாதிக்கும்.எனவே பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.என்று அறிவுறுத்தி உள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்