இந்தியா
Typography

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று தெரிய வந்துள்ளது.  

ஜனநாயக சீர்திருத்த கழகம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 78 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இவர்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 14 பேர் மீது கடத்தல், கொலை, கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

வழக்குகள் விபரத்தை அமைச்சர்கள் அவர்களின் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் மட்டும் அல்லாமல் நாடு முழுவதிலும் 609 மாநில அமைச்சர்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.  

 

இவர்களில் 113 பேர் மீது கடுமையான குற்ற பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 அமைச்சர்கள் மீதும் குறைந்தபட்சமாக  உத்திரகாண்ட மாநிலத்தில் 2 அமைச்சர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  நாட்டின் தலைநகரான டெல்லி அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது ஜனநாயக சீர்திருத்த கழகம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு கழகம்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்