இந்தியா
Typography

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைநகரமாக சென்னை மாறியுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, “சென்னை தற்போது போதைபொருள் கடத்தல் கும்பலின் தலைநகரமாக மாறியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதிக பாதுகாப்புள்ள புழல் சிறை வளாகத்தில் பாகிஸ்தான் கொடிகள் வீசப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்