இந்தியா
Typography

“ரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை. ரசிகர்கள் என்ன வகையில் ஆதரவு தந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இலண்டனின் இடம்பெற்ற ரஹ்மானின் ‘நேற்று இன்று நாளை’ இசை நிகழ்ச்சியில், தமிழ் பாடல்களைப் பாடியதாகத் தெரிவித்து குறிப்பிட்டளவு ஹிந்த இரசிகர்கள், நிகழ்த்தியை விட்டு இடைநடுவில் சென்றமை சர்ச்சையை தோற்றுவித்தது. இந்த நிலையிலேயே, ரஹ்மான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

குறித்த நிகழ்ச்சி தமிழில் தலைப்பிட்டு நடத்தப்பட்டாலும், 12க்கும் மேற்பட்ட ஹிந்தி மொழிப் பாடல்களும் பாடப்பட்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்