இந்தியா
Typography

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் வாக்களித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் 776 பாராளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்களித்தார். தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான் என மாயாவதி கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதை வரவேற்கிறேன் என குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேட்டியளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராவது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில், பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாருக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்