இந்தியா
Typography

ரயிலின் மேலே ஏறி பயணப்பவர்களின் சதவிகிதம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் குறைவடைந்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.  

தென் மாநிலங்களை  விட வடமாநிலங்களில் ரயிலின் மேற்புறத்தில் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் சதவிகிதம் அதிகம். இவர்கள் எதை பற்றியும் கவலைக்கொள்ளாமல் மேற் கூரையில் அமர்ந்து வெகு உல்லாசமாகப் பயணிக்கின்றனர். என்றாலும், இதில் இறப்பு விகிதம் என்பதும் இருக்கத்தான் செய்கிறது. அதை விட விபத்து ஏற்பட்டு கை, கால்களை இழந்து ஊனமானவர்கள் அதிகம். 

இந்நிலையில்தான் இதுக் குறித்து கவலைத் தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், இப்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும்  தெரிவித்துள்ளது. 

கடந்த 2014-15ம் வருடத்தில் ரயில் விபத்தில் ஊனமானவர்கள் 74 பேர் என்றும், இறப்பு எனப்து 2 பேர் மட்டும்தான் என்றாலும்,  இது பெருமைப்படக் கூடிய விஷயமில்லை என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவான பாதிப்புதான் என்றும் மேலும் அத்துறை தெரிவித்துள்ளது

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்