இந்தியா
Typography

உத்தர பிரதேச கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 5 நாளில் 63 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மாநில அரசு, உயிரிழப்புக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என்கிற தகவலை மறுத்துள்ளது. 

உத்தர பிரதேச முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ளது பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை. மாவட்டத்தில் பெரிய மருத்துவமனையாகவும் உள்ளது. இங்கு, கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட 30 குழந்தைகள் பலியான நிலையில், கடந்த சில மணி நேரத்தில் மேலும் சில குழந்தைகள் பலியாகினர். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால், அதிகபட்சமாக ஒரே நாளில் 23 குழந்தைகள் பலியாகியுள்ளனர். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது குழந்தை இறந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

Most Read