இந்தியா
Typography

செம்மரம்  வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திராவுக்கு ரயிலில் பயணித்த 32 தமிழர்களை ஆந்திர பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று கூறி இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 32 பேரும் திரு அண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் என்பதுக்கு குறிப்பிடத் தக்கது. 

இந்நிலையில் செம்மரங்களை வெட்டவந்ததாகக் கூறி ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, ஜெயலலிதா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், கைதான தமிழர்களுக்கு வாதாட வழக்கறிஞரையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டது தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS