இந்தியா
Typography

தெலுங்கானா மாநிலத்தில் எலிக்கு வைத்த மருந்துகளை உண்ட மான்கள் மரணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கும்மாடம் எனும் கிராமத்தில் விவசாயிகள் தங்களது நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளனர். அந்த பயிர்களை எலிகள் நாசம் செய்வதால் அவற்றை கொல்ல தீவனத்தில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து உருண்டைகளாக உருட்டி அங்கங்கு வைத்திருந்தனர். 

சோளக்காட்டின் அருகே வனப்பகுதி என்பதால் வனப்பகுதியில் இருந்து வயலுக்குள் புகுந்த 40க்கும் மேற்பட்ட மான்கள் எலிக்கு வைத்திருந்த தீவன உருண்டையை சாப்பிட்டு ஒவ்வொன்றாக அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. காலையில் வயலுக்கு வந்த விவசாயிகள் மான்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சில மான்களை கால்நடை மருத்துவமனைகளுக்கு போலீசார் தூக்கிச் சென்றனர் என்று தெரிய வருகிறது. 

சோளக் காட்டில் எலிக்கு வைத்திருந்த விஷத்தை சாப்பிட்ட 40 மான்கள் உயிரிழந்தன என்று தகவல் தெரிய வருகிறது. இதனால் தெலுங்கானா அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்